Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கு இன்று மாவட்டச் செயலகத்தில் சபாநாயகர் தலை மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக் கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள் ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத் தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், மற் றும் நெருக்கடி நிலைமைகள் காணப்பட்டுள்ளது.

பத்தாயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதில் பிரச் சினைகள் ஏற்பட்ட நிலையில் அதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் முகமாக இன்றைய தினம் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22,563 குடும்பங்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற நிலைப் பாடு நிலவியுள்ளது.