Breaking News

அரசியலுக்காக சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றதா ஜெயாவின் மரணம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங் கியிருந்தால் நலமாக இருந்திருப்பார். ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.

அவர் சிகிச்சை பெற்ற மருத்துவ மனை (அப்போலோ) நிர்வாகத்தை சரியான முறையில் இயங்க விடா மல் அழுத்தம் கொடுத்தது யார்?. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பாக ஜெயாவை சிகிச்சைக்காக வெளிநாட் டிற்கு அழைத்துச் செல்லாதது ஏன்? செய்தியாளர் சந்திப்பில் சீற்றம் கொண்டாா் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கமிஷன் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய சூழலில், மேற்கண்ட அதிரடி கேள்விகளை ஜெயா மரணம் குறித்து முன்வைத்துள்ள சி.வி சண்முகம், ஆறுமுகசாமி கமிஷன் ஒருபக்கம் விசாரிக் கட்டும்.

அரசு தனியாக ஓர் விசாரணை அமைப்பை அமைத்து ஜெயா மரணம் தொடர் பாக விசாரிக்க வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமெனவும் ஆக்ரோஷம் காட்டிய சி.வி சண்முகத்தின் பேச்சு அதிமுகவுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகம் ஜெயாவின் மரணத்தை முன்னிறுத்தி எழுப்பும் கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயாவின் இலாக் காக்களை கவனித்துக்கொண்ட இந்நாள் பன்னீர்செல்வத்தையும் சேர்த்துதான்.
இந்த நிலையில், ஜெயா மரணம் குறித்து சர்ச்சைகள் குறித்து இன்று செய்தி யாளர்களை சந்தித்த சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

ஜெயா மரணம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் விசா ரணை ஆணையத்தை திசை திருப்ப கூடாது, தேவைப்பட்டால் சிபிஐ விசா ரணைக்கு நடத்த உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.