Breaking News

தமிழ் தலைமைகள் பொறுப்புடன் செயற்பட்டால் தான் தமிழர்களிற்கு தீர்வு ; டக்ளஸ்

தமிழ் மக்களின் தலைமைகள் ஒரு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென  முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இலங்கை ரயில்வே திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணை ந்து ஏற்பாடு செய்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவா ரணப் பொருட்களை இன்று (01) பிற் பகல் 2 மணிக்கு கிளிநொச்சியில் வைத்துக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

அத்தோடு இன்று அல்லது நாளை ஜனாதிபதியை சந்தித்து வடக்கு மாகாண ஆளுனர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன் ஆளுனர் தொடர்பில் ஜனாதி பதியே முடிவுகளை எடுக்க வேண்டுமென அரசியல் கைதிகள் தொடர்பில் கேட்டபோது.

அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு பல்வேறு பட்ட பிரச்சனைகள் உள்ளன. தமிழ் மக்களினுடைய தலைமைகள் ஒரு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதன் மூலமே தமிழ் மக்களினுடைய பிரச் சனைகளுக்கு தீர்வு காணமுடியும். இது எனது அனுபவத்திலிருந்து சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.