2019ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்.!
எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டம் இம்மாதம் 7 ஆம் திகதி நிதியமைச்சரினால் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.