வவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா உதவ வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உற வுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவி ருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினா லேயே இன்று இக் கவனயீர்ப்பு போரா ட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட் டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு பசார் வீதி வழி யாக ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவன யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதன்போது எமது பிள்ளைகள் வராது எமக்கு பொங்கல் இல்லை. மாறி மாறி வந்த அரசாங்கங்களில் நாம் நம்பிக்கையிழந்து விட்டோம். கூட்டமைப்பும் எம்மைப் பற்றி பேசாது சிங்கள மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பது போன்று செயற்படுகின்றது.
இனி நாம் அமெரிக்காவையையும், ஐரோப்பிய ஒன்றியத்தையுமே நம்புகின் றோம். அமெரிக்கா வந்து விரைவாக எமக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்கள்.