Breaking News

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று.!

புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று ஆரம்பமாக வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி காரியாலயத் தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கான திணைக்களங் கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் எவையென்பது குறித்த தெளிவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் கூடு கின்ற, முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

கடந்த 20 ஆம் திகதி புதிய அமைச் சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், அதே தினத்தில் அமைச்சரவை கூடியதுடன், இடைக்கால கணக்கு அறிக்கை க்கு அனுமதி வழங்கியுள்ளனா்.

இதேவேளை, தமது அமைச்சின் கீழ், வெறுமனே பெயருக்காக, நான்கு அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, அரச முயற்சியாண்மை மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பில் தாம் பிரதமரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு தொடர்பில் பிரச்சினை எழுந்த போது, அதற்காக தாம் காட்டிய எதிர்ப்புக்கள் காரணமாகவே, தமது அமைச்சின் கீழ் முக்கிய அரச நிறுவனங் கள் கொண்டு வரப்படவில்லையெனச் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தமக்கு அளிக்கப்பட்ட அமைச்சுப்பொறுப்புகள் குறித்து, அரச முயற்சியா ண்மை மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வினால், அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையில், அமைச்சரவை இன்று ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பயனு டையதாக செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சூழ்ச்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம், சரியாக செயற்படும் பட்சத்தில் மீண்டும் அரசாங்கமொன்றை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனினும், துரிதமாக நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படா விடின் நாடு பாரிய பின்னடைவை எதிர்கொள்ள நேரிடுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மாத்திரம் திருப்திப்படுத்துவதற் காக 2019 இல் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பை, நாடாளு மன்றத்தில் நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென  நாடாளு மன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ் விடயத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் எந்தவொரு பிரச்சி னையும் எழாது என்றும் அவர் அதேநேரம் கொண்டுவரப்படும் புதிய அரசிய லமைப்பு மறுசீரமைப்பின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் எந்த வகையி லும் பாதுகாக்கப்பட மாட்டாது.

நாடாளுமன்றத்தினுள் அரசாங்கத்தின் தீவிர தாராளவாத கொள்கையைப் பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவுக்கு நன்றிக் கடன் செலுத்தாமல் அரசாங்கத்தினால் இருக்க முடியாதென லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.