சுமந்திரன் மீது குற்றச்சாட்டு - சிவசக்தி ஆனந்தன்.!
புதிய அரசியல் சாசனத்திற்கு சமஷ்டி உள்ளடக்கப்பட்டுள்ளது என கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளாா்.
மன்னாரிலுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவல கத்தில் அரசியல் கைதிகளின் பிள் ளைகள் மற்றும் வறிய குடும்பங்க ளுக்கு சைக்கிள்களை வழங்கி வைக்கும் நிகழ்வின் பின்னர் கருத்து வெளியிட்ட போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டி யிட்டு தற்போது சுயாதீன உறுப்பின ரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்டிருந்த நவம் பர் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணா னது என ஸ்ரீலங்காவின் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற முதல் தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்பட்டதுடன், அதில் வெற்றியும் கண்டிருந்தது. இதனையடுத்து பெரும்பான்மை அற்ற நிலையில் காணப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமது ஆதரவை வழங்கி, ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட் டமைப்பு உதவியிருந்தது.
எனினும் தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், அது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிமொழியை பெறுமாறு பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர்.
அவ்வாறான எழுத்துமூல உறுதிமொழிகள் பெறப்படாத நிலையில், தற் போது உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினை க்கு தீர்வை பெற முடியுமென நம்பிக்கை உள்ளதாக எம்.எ.சுமந்திரன் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரி வித்துள்ளாா்.
இந்த நிலையில் இந்த அரசியலமைப்பில் சமஷ்டி அம்சங்கள் உள்ளதாக எம்.எ.சுமந்திரன் உறுதியாக கூறிவரும் நிலையில், அவ்வாறான எந்தவொரு அம்சமும் இல்லை என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 28 ஆம் திகதி மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்திக்கையில் தெரிவித்துள் ளாா்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கூற்றுக்கள் மூலம், சமஷ்டி தீர்வு தொடர்பில் எம்.எ.சுமந்திரனின் பொய்யுரைக்கின்றார் என்பது தெளிவாகியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.