Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயற்படவில்லை - சி.வி.கே.

விடுதலைப்புலிகளை ஜனநாயகத் தன்மையை எப்பொழுதும் கைகொண்டவர் கள். ஜனநாயகத்திற்கு விரோதமாக எப்போதும் செயற்படவில்லையென  வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் விடுதலைப் புலி கள் பற்றி தப்பாக கதைப்பவர்கள் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் எனத் தெரி வித்துள்ளார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊட கச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சா ளர் சுமந்திரன் விடுதலைப்பலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை என வும் கட்சித் தலைவர்களை கொலை செய்துள்ளார்கள் எனக் கேட்ட போதே தெரிவித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் தலைவர் என்னுடன் பேசியதை மட்டும் நான் கூற விரும்புகின்றேன். பிரபாகரன் 1991 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவை சந் திப்பதற்கு என்னை தெரிவு செய்து அனுப்பினார்.

அப்போது ஈரோஸ் பட்டியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பிரேரித்து வர்த்தகமாணி பிரசுரம் வெளியிடப்பட்டு அதற்குப் பின்னர் அதன் அடிப்படை யில் தான் அனுப்பினார்கள்.

இதில் இரண்டு விடையங்களை கூறினார்கள். நாங்கள் எல்லா நேரமும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்க முடியாது. பாராளுமன்ற அரசியலிலும் நாங்கள் ஈடுபடவேண்டிய தேவை உள்ளது.

ஆகவே அந்த வகையில் இந்தப் பாராளுமன்றப் பொறுப்பை நீங்கள் எடுத்து ஜனநாயக ரீதியாகவும் அந்த வழி முறைகளிலும் நாங்கள் முன்னேடுக்க வேண்டும் என்று 1991 ஆம் அண்டு பிரபாகரன் எனக்குக் கூறினார்.

இந்த விடையங்கள் நீண்ட காலத்தின் பின்னர் பேசப்படுகின்றபோது சில விடையங்கள் மறைக்கப்படுகின்றனவா மறக்கப்படுகிறதா என தெரியாமலும் இருக்கும்.

ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரையில் ஜனநாயகத் தன்மையை எப்பொழுதும் கைகொண்டவர்கள் அதனாலே தான் ஒவ்வொரு கிராம அமைப் புக்கள் , பொது அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கு விரோதமாக எப்போதும் புலிகள் இருக்கவில்லை. இந்த விடையம் உங்கள் கட்சி சார்ந்தவர்களுக்குத் தெரியாதா எனக் கேட்டபோது அக் காலத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கும் தற்போது அரசியலுக்குள் வந்த வர்களுக்கும் ஒரு இடைவெளி இருக்கின்றுது 30 வருட கால இடைவெளி உள் ளது.

கூட்டமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல. ஆனால் அப்படி வரும் போது உண்மை நிலையினைக் கூறவேண்டியது எங்களின் கடப்பாடு ஏனென்றால் நான் அந்தக் காலத்தில் இருந்து அதற்குள்ளே வாழ்ந்தவன் முன்னிய தலைவர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப் பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி சிலருக்குத் தெரியாமலும் இருக் கலாம் இதனை இலையென்று கூறவில்லை.

சில கொலைகள் நடந்துள்ளன. அது யதார்த்தமான உண்மை. ஆனால் அதற் கான காரண காரியங்கள் எல்லாம் புலிகள் தான் கூறியிருக்கவேண்டும். அது எனக்குத் தெரியாது. காரணம் இல்லாமல் நடத்திருக்காது அதற்காக கொலை செய்ததை நியப்படுத்தவும் விரும்பவில்லை.

 எது எப்படி இருப்பினும் மக்களுக்கு எது சரி எது பிழை என்று தெரியாதவர்கள் அல்ல . அன்னப் பட்சி போன்று பாலுக்கும் தண்ணிக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்வார்கள். யார் எதைச் செய்கின்றார்கள் எதை கூறுகின்றார்கள் என்று பார்த்தால் சரி ஒரு சிலர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பார்கள்.

ஏனென்றால் அவர்கள் அரசியலுக்கு இப்போதுதான் வருகின்றார்கள். அவர் களுக்கு அரசியல் தெரியாது. பலர் என்னிடம் நடந்த சம்பவங்களை ஆவணப் படுத்துமாறு கேட்கின்றார்கள் .அவ்வாறான சிலவற்றை நான் ஆவனப்படுத்து வேன் ஆனால் உள்ளுக்குள் சென்று விடுவேன் இதன் காரணமாகத்தான் நான் அதனை செய்யவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.