Breaking News

பியதாசவுக்கு அதிர்ச்சி வைத்தியம் மைத்திரி! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்.!

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான அணி ஒன்று வலுவடைந்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கலந்துரை யாடலிலேயே இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலை மையில் நடந்த கூட்டத்தில், தற் போதைய பொதுச் செயலாளர் பேராசி ரியர் றோகண லக்ஸ்மன் பியதாச வுக்குப் பதிலாக, தயாசிறி ஜெயசேகரவை பொதுச்செயலராக நியமிக்க தீர் மானித்துள்ளனா்.

 தயாசிறி ஜெயசேகர, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவராவார். சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாள ராக பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச சில மாதங்களே பதவி வகித் துள்ளாா்.