Breaking News

நீர்வீழ்ச்சியை பார்வையிடச்சென்ற வெளிநாட்டுப் பிரஜை பலி.!

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான நீர் வீழ்ச்சியின் பாது காப்பற்ற பகுதியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் தவறி விழுந்தது உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் புதுவருடப்பிறப்பன்று நடைபெற்றுள்ளதுடன் மரணித்தவர் பிரித் தானிவைச் சேர்ந்த 29 வய துடைய இளைஞர் என பொலிஸா ரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது வெளிநாட்டு நண் பர்களுடன் நோட்டன் பிரிட்ஜ் தெப டன் சமனெலிய தோட்ட பகுதியில் நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது இச் சம்பவம் நடைபெற்றுள் ளது.

மரணித்தவரின் உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறை யில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் மேற் கொண்டு வருவதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.