Breaking News

சுமந்திரனின் கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்.!

புதிதாக அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சானத்திலும், தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் நாட்டின் ஆட்சி கட்டமைப்பை குறிக்கும் ஒற்றையாட்சி என்ற “ஏக்கிய ராஜ்ய” என்ற பதமே தொடர்ந்தும் பேணப்படும் என சிறிலங்கா அரசாங்கம் திட்வட்டமாக தெரி வித்துள்ளது.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.ஏ.சுமந்திரன் கூறிவரும் “ஒரு மித்த நாடு” என்ற பதமும் எந்த வொரு இடத்திலும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் உறுதிப்படுத்தி யுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல,

தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல அரசியல் சாசன பிரதிகளிலும் “ஏக்கிய ராஜ்ய” என்ற சொல்லே பயன் படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார். உத்தேச அரசியல் சாசனத் தின் இடைக்கால அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டு

“ஏக்கிய ராஜ்ய” என்றால் ஒருமித்த நாடு என்று தமிழில் குறிப்பிடுவதாக ஏற் றுக்கொண்டு உள்ளடக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி யாழ்ப் பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அடித்துக்கூறியிருந்த நிலையிலேயே லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வறிவிப்பை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் கண்டி குண்டசாலை பகுதியில் நடத்தியிருந்த அந்தக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் அரச தொழில் முய ற்சி, மரபுரிகமைள் மற்றும் கண்டி பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ் மன் கிரியெல்ல, சுமந்திரனின் கூற்றுக்கு முற்றிலும் மாறான தகவலைத் தெரிவித்துள்ளாா்.

“இன்று நாம் புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்கிக் கொண்டிருக் கின்றோம். அடுத்தவருடம் அதனை நாடாளுமன்றில் சமர்பிக்கவும் திட்டமிட் டுள்ளோம். இது தொடர்பில் இரண்டு விடயங்களை கூற விரும்புகின்றேன்.

தற்போது உள்ள அரசியலமைப்பின் 9 ஆம் சரத்தின் அடிப்படையில், பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னு ரிமையில் எந்தவொரு மாற்றத்தினையும் மேற்கொள்ளப் போவதில்லை.

பௌத்த மதத்திற்கு தொடர்ந்தும் முன்னுரிமை வழங்கப்படும் என்ற சரத்தை தொடர்ந்தும் பாதுகாப்போம். அதேபோல ஒற்றையாட்சி என்ற விவகாரம், நாம் ஒற்றையாட்சியை இல்லாது செய்துள்ளதாக எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ளனா்.

அப்படியெதுவும் இல்லை. ஏக்கிய என்ற வார்த்தைப் பிரயோகத்தை நாம் அர சியல் சாசனத்தின் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களிலுமான பிரதிகளிலும் பயன்படுத்தவுள்ளோம்.

அதற்கமைய மூன்று மொழிகளிலும் உள்ள அரசியல்ச சான பிரதிகளில் ஏங் கிய என்ற வார்த்தைப் பிரயோகமே உள்ளடக்கப்பட்டிருக்கும். அதனால் இதனை யாராலும் தவறாக அர்த்தப்படுத்த முடியாது.

“ஏக்கிய” எனும் சொல்லினை தமிழில் “ஒருமித்த நாடு” என்று குறிப்பிடுவோம் என்று தமிழ் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் நாம் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என்பதை தெளிவாக கூறிவிட்டோம். அதற்கமைய நாட்டின் ஆட்சி கட்டமைப்பு ஏக்கிய என்ற வார்த்தைப் பிரயோகமே தமிழிலும் இருக்கும்.

ஆங்கிலப் பிரதியிலும் இருக்கும். அவ்வாறான நிலையில் அதன் அர்த்தம் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது” என்றார். இதேவேளை இரா. சம்பந்தன், எம்.சுமந்திரன் ஆகியோரினது முழுமையான ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஒத்துழைப்புடன் மீண்டும் சிறிலங்காவின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசெம்பர் 28 ஆம் திகதி கண்டிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, கண்டி மல்வது மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்தித் திருந்தார்.

இதன்போது உத்தேச அரசியல் சாசனத்திலும் தற்போதைய அரசியல் சாச னத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையும், “ஏக்கிய ராஜ்ய” என்ற ஒற்றையாட்சியும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்திருந்தார்.

மகாநாயக்கத் தேரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய இவ் உத்தர வா தங்கள் குறித்த செய்தியை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையில், ரணில் ஒற்றையாட்சி என்றா குறிப்பிட்டார் என்று சுமந்திரன் தமிழ் ஊட கங்களிடம் கடும் தொணியில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

எவ்வாறாயினும் சிறிலங்காவின் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் “ஏக்கிய ராஜ்ய” என்ற சிங்கள வார்த்தைக்கான தமிழ் வார் த்தைப் பிரயோகம் “ஒற்றையாட்சி” என்றே மிகத்தெளிவாக தெரிவாகியுள் ளது.

இந்த நிலையில் ஒற்றையாட்சியை குறிக்கும் ஏக்கிய ராஜ்ய என்ற சிங்கள வார்த்தையே உத்தேச அரசியல் சாசனத்தின் தமிழ், ஆங்கில மொழிமூல பிரதிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுடன் நடத்தும் கலந்துரையாடல்க ளில் அபிவிருத்தியைத் தவிர வேறு எந்த விடயங்கள் குறித்தும் பேசுவதில் லையெனத் தெரிவித்துள்ளாா்.

“நாம் தமிழ் கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டு செயற்படுவதாக எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். உங்களுக்கு நான் இதைத் தெரி விக்க வேண்டும். அவர்கள் அபிவிருத்தியினை மாத்திரமே கேட்கின்றனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட நாம் அவர்களுடன் கலந்துரையாடினோம். அவர்களும் இங்குள்ள மக்கள் கேட்கும் விடையங்களையே கேட்டனர். அபி விருத்தி, வீதி அபிவிருத்தி, புதிய வேலைவாய்ப்புகள் போன்றவற்றையே வேண்டுகின்றனா்.

நாம் அவரை குறித்தே கலந்துரையாடினோம். மாறாக தனிநாடு வழங்குவது தொடர்பிலோ, பிளவினை ஏற்படுத்தவோ நாம் கலந்துரையாடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பல தடவைகள் எம்மை சந்தித்து, எமது மக் களுக்கு அபிவிருத்தியை பெற்றுத் தாருங்கள் என்று எம்மிடம் கேட்டுக் கொண்டார்.