Breaking News

சுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு!

கிளிநொச்சிக்கு விஜயமாகிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்றிரவு அவரது அலுவ லகத்தில் சந்தித்துள்ளார்.

இக் கலந்துரையாடலின்போது மாவட் டத்திலேயே செயலிழந்து காணப்படு கின்ற குறிஞ்சாத் தீவு உப்பளம் பரந் தன் இரசாயன கூட்டுத்தாபனம் போன்ற தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல், விவசாயிகளுடைய நலன்களில் அக் கறை செலுத்துதல் மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வடமாகாண ஆளுநர்,



நீர்ப்பாசன திட்டத்திலேயே தமிழ் மக்களினுடைய ஒற்றுமை தொடர்பில் ஒரு சுமுகமான முடிவுபெற வேண்டும் அதற்கான முன் யோசனைகள் பற்றியும் நான் கேட்டுள்ளேன் பாராளமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்களை நாங் கள் கேட்டுள்ளோம்.

மழை நீரை நம்பி இருக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு இது சாதகமாக அமைய வேண்டும் என்று வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவாகும் அது போலவே அவருடைய முடிவும் அதுவாக இருக்குமென நான் நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளாா்.