நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் மஹிந்த ராஜபக்ச!
சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற தாமரை மொட்டுக் கட்சியின் உறுப் புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது விசு வாசிகள் ஐம்பது பேரினது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் விரைவில் பறிபோகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாா்.
மஹிந்தவும் அவரது தரப்பினரும் நாட்டின் சட்டம் குறித்த புரிதல் இன்றி சுயலாப அரசியலுக்காக அவ சரப்பட்டு செயற்பட்டதாலேயே இந்த நெருக் கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தாக குறிப்பிட்டும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான கிரியெல்ல,
எனினும் தமது இந்த தவறை மூடி மறைத்துக்கொள்ள தற்போது அவர்க ளும், அவர்களது விசுவாசிகளும் நாட்டில் இனவாதத்தை தூண்டும் முயற்சி களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டி குண்டசாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே லக்ஸ்மன் கிரியெல்ல இத் தகவல்களைத் தெரிவித்துள்ளாா்.
சிறிலங்கா ஜனாதிபதியுடன் இணைந்து ஒக்டோபர் 26 ஆம் திகதி தோல்வி யில் முடிவடைந்த ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜ பக்ச, நவம்பர் 11 ஆம் திகதி அவரது சகோதரரான பெசில் ராஜபக்ச உரு வாக்கிய தாமரை மொட்டுக் கட்சி என அழைக்கப்படும் சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளாா்.
மஹிந்தவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 82 நாடாளுமன்ற உறுப்பி னர்களில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுன வின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக அக் கட்சி அறிவித்திருந்தது.
எனினும் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவின் உறுப் புரிமம் பெற்றுக்கொண்டதால் தற்போது எதிர்கட்சித் தலைவராக நியமிக் கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் நாடாளுமன்ற உறுப்புரிமை கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால் இது ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் சதி என்றும், மஹிந்தவினதும், அவரது விசுவாசி களினதும் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறித்து அதன் ஊடாக நாடாளு மன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்ற திட்டமிட்டுள் ளதாக மஹிந்த தரப்பும், மஹிந்தவிற்கு விசுவாசமான சிங்கள பௌத்த இனவாத அமைப்புக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும் இந்த நிலைக்கு மஹிந்தவும், அவரது விசுவாசிகளின் தவறே கார ணம் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிக்கின்றார். “சட்டம் மிகத் தெளிவானது. 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமரைமொட்டுக் கட் சியில் உறுப்புரிமையினை பெற்றுள்ளனர்.
ஒரு கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒருவர் அந்தக் கட் சியின் உறுப்புரிமையிலிருந்து விலகினால் அவரது ஆசனம் இல்லாமல் போய்விடும். அதுவே சட்டம். எனினும் இது பெரும்பாலானோருக்கு தெரி யாது. காரணம் இதனை யாரும் பெரிதாக பயன்படுத்தவில்லை.
அன்று மஹிந்த ராஜபக்ச தரப்பு இணைந்துகொண்டதை அடுத்துஜனாதிபதி நாடாளுமன்றினைக் கலைத்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் 50பேர் தாமரை மொட்டுக் கட்சியில் உறுப்புரிமையினைப் பெற்றுள்ளனா்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தரவை நீதிமன்றம் மீளப்பெறப்படும் என்று இவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீதி மன்றம் ஜனாதிபதியின் தீர்ப்பை இரத்துச் செய்ததால், மஹிந்த உட்பட அவ ரது விசுவாசிகள் தாமரை மொட்டுக் கட்சியில் சிக்கிக்கொண்டனர்.
தற்போது அவர்கள் தாமரை மொட்டுக் கட்சியின் உறுப்புரிமையினை பெற வில்லையெனத் தெரிவிக்கின்றனர். எனினும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் மொட்டுக் கட்சியில் உறுப்புரிமையினைப் பெற்றுக்கொண்டது தெளிவாக தெரிகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பது பல கட்சிகளை ஒருங் கிணைந்த ஒரு கூட்டமைப்பாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணிஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. அதற் கமைய இந்தக் கட்சிகளின் உறுப்புரிமை பெற்றவர்களே தேர்தலில் நிறுத்தப்பட்டு நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனா்.
அதனைவிடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உறுப்புரிமையை எவரும் பெறுவதில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பின்னர் கூட்டமைப்பிலுள்ள கட்சியின் உறுப்புரிமையைிலிருந்து விலகி னால் அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் நாடாளுமன்ற ஆசனம் இல்லாது போய்விடும்.
அதுவே சட்டம். எவ்வாறாயினும் இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்ட, மீண்டும் மஹிந்தவிற்கு நாடாளுமன்றுக்கு வந்து நாடாளுமன்ற நடவடிக்கை களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கப்பெற நான் பிரார்த்திக்கின்றேன்.
2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்தப் போவ தில்லை என்பதை அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கிரியெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.
இச் சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்க விரும்பு கின்றேன். அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலுக்கு வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றிபெறுவோம்.
எமது கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தற்போதும் பதவி வகிக்கின்றார். அவருடன் கைகோர்த்துக்கொண்டு இந்த தேர்தலுக்கு நாம் முகம்கொடுப்போமெனத் தெரிவித்துள்ளாா்.