Breaking News

மகிந்த சுகந்திர கட்சி அங்கத்தவர் எனின் எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம்.!

2015 ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் சுகந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியதன் காரணமாக பாராளு மன்றத்தில் மூன்றாம் நிலை பெரும்பான்மை கட்சியான தமிழ்த் தேசிய கூட் டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

ஆனாலும் அன்மையில் இலங்கை அரசாங்கத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியா னது தனித்து ஆட்சி அமைத்துள்ளது எனவே இரண்டாவது பெரும்பான்மை உள்ள கட்சியாக சுகந்திரக் கட்சி காண ப்பட்டாலும் தற்போது சபாநாயகரி னால் மகிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் குறித்த முடிவு பற்றி கட்சி தலைவர்கள் கூட்டத்திலோ அல்லது ஏனைய கடையினரிடமோ ஆலோசிக்கவில்லை அது மட்டும் இன்றி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவராக உள்ளார்.

பாராளுமன்ற நியதியின் படி பாராளுமன்றத்தில் இதுவரை பதிவு செய்துள்ள 6 கட்சிகளை தவிர வேறு எந்த கட்சி அங்கத்தவர்களும் எதிர்க்கட்சி தலைவராக முடியாது எனவே மகிந்த முதலில் தான் எந்த கட்சி அங்கத்தவர் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

தற்போது சபாநாயகர் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான விடை யங்களை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவே அக் குழு வின் அறிக்கை வருகின்ற 8 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது எனவே அவ் அறிக்கையின் படி சபாநாயகரின் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோமெனத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ சுகந்திர கட்சி என நிரூபித்தால் அவர் எதிர் கட்சி தலைவரா கலாம் அவர் பொதுஜன பெரமுன கட்சி அங்கத்தவராக இருந்தால் அவர் எதிர் கட்சி தலைவராக முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.