Breaking News

தமிழீழ விடுதலை புலிகளுக்கெதிரான போர் முடிவிற்கான காரணம் இதுவே - மகிந்த!

தமிழ் மக்களுக்கு எதிராக தான் ஒருபோதும் யுத்தத்தை மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியான குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச  தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடி வுக்கு கொண்டு வந்தமை பிரதான காரணமென மஹிந்த ராஜபக்ச புலம்பி யுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட போர் குற்றங்கள் உள் ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற் றங்களுக்கு பொறுப்புக்கூற வேண் டியவர்களை தண்டிப்பதற்குத் தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண முன்னாள் முதலமைச் சரான தமிழ் மக்கள் கட்சியின் தலை வர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கதிர்காமம் கிரிவேஹேர விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது நாட்டின் அரச தலைவராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் இக் கூற்றுகளுக்கு பதிலளித்துள்ளார்.

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறியது போல, இராணுவத் திற்கோ தனக்கோ பாவங்களை மூடிமறைக்க வேண்டிய தேவையில்லை என் பதை தெளிவாக கூறிக்கொள்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் குறிப்பாக தமிழ் மக்களின் உரிமை களைப் பாதுகாப்பதற்காகவுமே தான் உட்பட அரச படையினர் பயங்கரவா தத்தை ஒழிக்கும் யுத்தத்தை முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு எதிராக தான் ஒருபோதும் யுத்தத்தை மேற்கொள்ளவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

எனினும் பயங்கரவாதத்திற்கு துணைபோன தரப்பினருக்கு இன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அரச படையின ரும், தான் உட்பட அதற்கு தலைமை தாங்கிய தலைவர்களும் குற்றவாளி களாகவே தெரிவதாகவும், இது குறித்து தான் கவலையடைவதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.