Breaking News

இராணுவத்தினரால் படுகொலையான திருகோணமலை மாணவர்களின் நினைவு நாள் !

இன்றைய தினம் உயர்தர மாணவர் பெறுபேறு வெளியாகி பல்கலைக்கழக மாணவா்களின்  அவர்களின் சிறிய சந்தோசங்கள் ராக்கிங் ,ஆலய சுற்றுலா ,தைப்பொங்கல் புத்தாடை வாங்கும் அவா உறவினரோடு தமது பெறுபேறு சொல்லி பொருட்களை வாங்கி தமது மாணவப் பருவத்தை கழிப்பது இனமத பேதமின்றி செயற்பாட்டை ஆற்றுவது அனைத்து மாணவரினதும் வழமை யான செயற்பாடே.

இப்படி சந்தோசத்துடன் கடற்கரை யில் பொழுதை போக்கிய 13வருடத் தின் முன் சரியாக இன்றைய தினம் மாணவரை பயங்கர வாதியாக்கி கொலை செய்து நீதியை கூட பெற் றுத்தராத காட்டுமிராண்டி பயங்கர வாத அரசு இலங்கை அரசுதான் என் பதை தமது கோர முகத்தை காட்டிய நாளாகும்.

ஜனவரி 2 - இன்று திருகோணமலை மாணவர் படுகொலை நாளுமாகும்.!!! 2006 சனவரி 2 ஆம் நாள் - இலங்கையின் கிழக்கே திருகோணமலை, கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் கொடூ ரமாக படுகொலை செய்யப்பட்ட நாள்.

 உலகில் எத்தகைய இழிவான இராணுவமும் மாணவர்களை கொலை செய்ய துணிவதில்லை. மாணவ சக்தி என்பது மகத்தான சக்தி என அறிந்து மாணவர்க ளில் கை வைக்கவே உலக இராணுவம் அஞ்சும்.

ஆனால் இலங்கையில் இனவாத இலங்கை அரசின் ஏவல் படை அதிலும் பின் நின்றதில்லை. இரக்கமற்று பல்லாயிரம் மாணவர்களை பலி சிங்கள இராணு வத்தின் கொடிய படுகொலைகளில் ஒன்று நிலாவெளியில் நடைபெற்ற இந்த மாணவர் படுகொலை.

2006 சனவரி 2 திங்கட்கிழமை இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல் கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத் தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொலை செய்யப்பட் டுள்ளனா்.

 படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்: மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21) யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21) லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21) தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21) சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21) இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரி வித்துள்ளாா்.

தூரத்தில் இருந்து கிரானைட் வீசினார்கள் என்ற அரசபடையின் பொய் குற்றச் சாட்டுக்கள் எத்துணை பொய்யானது என்பதை குழந்தைகளுக்கு கூட புரிந்து கொள்ள முடியும்.

மாணவர்களை மிரட்டி அடக்கி அடித்து விரட்ட முயன்ற காவல்துறையினரை மீறி மாணவர்கள் துணிச்சலோடு தமது நிலத்தில் தாம் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடிய திடலில் விளையாடி கொண்டு இருந்ததால் அடங்க மறுத்த எதிர்ப்பில் கோபமுற்றே கொன்றுள்ளாா்கள்.

நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல் கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரண மென குற்றம் சுமத்தியுள்ளனா்.

இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சி யத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச் சுறுத் தப்பட்டுள்ளாா்.

ஒரு தந்தையாக என்பதை கடந்து சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற ஒரு மருத் துவராக தடைகளை மீறி சாட்சியம் வழங்கியுள்ளார் மருத்துவர் மனோகரன். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்கு மாறு அரசிடம் வலிமையாக கேட்டுக்கொண்டது.

எல்லைகளற்ற செய்தியா ளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப் படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவிய லாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந் தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளாா்.

எனவே இந்த 5 மாணவர்களின் படுகொலைகளின் தொடராக பயங்கரவாத அர சால் அந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலையும் பார்க்கப்பட வேண்டும். இவற்றுக்கு நீதி வேண்டும். மறுக்கப்படும் நீதி அநீதி களை விட கொடியது.

இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெறுவதாக அவ்வப்போது கண் துடைப்புகள் நடந்து வந்த போதிலும் இந்த மாணவர்கள் படுகொலைக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை.

மாணவர்களில் கை வைத்ததால் அனைத்துலக மட்டத்தில் மாணவர்கள் படு கொலை பற்றி எழுந்த சலசலப்பால் விசாரணை நாடகம் 2013 இல் நடத் தப்பட்டது. '"இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப் படை யினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 யூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சந்தேக நபர்களை ஆகஸ்த்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திரு கோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது." என நீதியாக நடப்பது போல் விசா ரணை நாடகம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைப்பு செய்தி களாக வெளி வந்தன.

ஆனால் கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திரு கோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மாமனிதர் ரவி ராஜ் கொலை வழக்கு போலவே நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டது இந்த 5 மாணவர்கள் + 1 ஊடகவியலாளர் வழக்குகளிலும்.

இன்று சர்வதேசம் எங்கும் வியாபித்திருக்கும் தமிழர்கள் இந்த செய்திகளை சர்வதேசத்திற்கு எடுத்து செல்லும் பணியை முனைப்போடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களாக மாறி கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களின் உண்மைக்கான விதைப்புக்கு அர்த்தம் சேர்க்க உழைக்க வேண்டும்.

- நன்றி ஐ.பி.சி.இணையத்திற்கு -