Breaking News

பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் இல்லையென்கிறாா் - சம்பந்தன்!

நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று சபையில் தெரிவித்துள்ளாா்.

சபாநாயகர் அறிவிப்பு வேளையி லேயே சபாநாயகரின் இத் தீர்மா னத்தை பிரதி சபாநாயகர் அவைக்கு அறிவித்திருந்தார். இதையடுத்து எதி ர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது மஹிந்த ராஜபக்சவா என்று நிலவிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இது தொடர்பில் தங்கள் கருத்து என்னவென்று இரா.சம்பந்தனிடம் வினவியபோதே ஒரே வார்த்தையில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளாா்.