முல்லைத்தீவு - கோடாலிகல்லு பகுதியில் இராணுவ வாகனம் விபத்தில் சிக்கியது.!
முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் நடை பெற்ற வாகன விபத்து தொடர்பான தகவலிற்காகச் சென்ற ஊடகவியலாளர் களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரி வித்துள்ளாா்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் நடைபெற்ற போதைப் பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளனா்.
ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்துவிட்டு வவுனியா பகுதி நோக்கிச் சென்றபோது இவ் விபத்து நடை பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்தில் சிக்கியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண் டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள னா்.
இவ் விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும் கோப்ரல் ஒருவரும் உயிரிழந் துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தகவல் சேகரிப்புக்காகச் சென்ற தமக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரி வித்துள்ளனா்.