இரசாயன குண்டுகள் பொது மக்கள் மீது வீசப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது - ஸ்ரீதரன்.!
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இரசாயன குண்டுகள் பொது மக்கள் மீது பயன்படுத்தப்பட்டமைக்கான சகல ஆதாரங்களும் உள்ளன. அர சாங்கம் இரசாயன குண்டுகளை பயன்படுத்தவில்லை என்றால் சர்வதேச விசாரணையில் உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலை மையில் கூடியது. சபை ஆரம்ப நிகழ் வுகள் நடைபெற்ற பின்னர் இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே இவ்வாறு தெரிவித்துள் ளாா்.
இந்த மண்ணில் இரசாயன குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன. அதனை முடியு மானால் மறுத்துக்காட்டுங்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏன் மனிதாபிமான கண்களில் பார்க்கக்கூடாது?
நாட்டில் ஸ்தீரமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்திருக்கின்றது. தமிழரின் பிரச்சினைக்கு முறையான தீர்மானம் ஒன்றை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையிலே அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்துக்கு வாக்களித்துள்ளோம்.
எனவே யுத்தக் குற்றத்துக்கு சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் தான் முறையான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு உள்ளது.
யுத்தத்தின் போது இரசாயன குண்டுகள் பாவிக்கா விட்டால் அரசாங்கம் அச்ச மின்றி சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க முன் வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.