தேர்தலை தெரிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை தெரிவிப்போம் - நாமல்
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை தெரி வித்தால் நாங்கள் எமது வேட்பாளரை தெரிவிப்போம். வேட்பாளரை தெரிவு செய்வது எமக்கு பெரிய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ஷ அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பியவாறு உள்ளனா். இவ் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ள மாட்டோம். ஏனெனில் எமது எதிர்பார்ப்பாக இருப்பது மாகாண சபை தேர்த லாகும். அதற்கான முயற்சியிலேயே நாங்கள் உள்ளோமெனத் தெரிவித்துள் ளாா்.