Breaking News

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து.!

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 6 உடன்படிக்கைகள் கைசாத் திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது இருதரப்பு நட்புறவு புரிந்துண ர்வு மற்றும் அபிவிருத்தியை நோக் காகக் கொண்டு இவ் ஆறு ஒப்பந்தங்க ளும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அர சாங்கம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு ஒப்பந்தங்களில் கைச்சாத் திடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சுற்றுலாத்துறை ஆய்வு மற்றும் அபிவிருத்தி, கல்வி மற் றும் பயிற்சி சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டம், முதலீடு மற்றும் இரு தரப்பினரால் தீர்மானிக்கப்படும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேம் படுத்துவதற்கான ஒப்பந்தம்,

இரு நாடுகளுக்குமிடையில் ஊழியர் சேமலாபம் மற்றும் உரிமைகளை பாது காத்தல் திறனாற்றல் சேவைநிலை தொழில் ரீதியில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தல் குடியகல்வு பணியாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் உறுதி செய்தல் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்ப தற்காக சட்ட உதவிகளை வழங்குதல் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.