Breaking News

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவேன் - அசாத் சாலி

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டி யது அரசாங்கத்தின் கடமை. அதனால் மேல் மாகாண பாடசாலைகளை முன் னேற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளாா்.

மேல் மாகாணத்தின் 8ஆவது ஆளுந ராக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதி பதியால் நியமிக்கப்பட்ட தேசிய ஐக் கிய முன்னணியின் தலைவர் இன்று தனது கடமையை ராஜகிரியவில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனை யில் தனது கடமையை பொறுப்பேற் றுள்ளாா்.

மேலும்,

மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாணசபை முதலமைச்சர்கள் இணக்கப்பாட்டு டன் இணைந்து செயற்பட்டால் தான் அந்த மாகாண மக்களின் தேவைகளை மேற்கொள்ள முடியும்.

என்னைப் பொறுத்தவரையில் நான் எப்போதும் சத்தியத்துக்காக குரல் கொடுத்து வருபவன். அதனை மேல் மாகாண முதலமைச்சருடன் இணைந்து செய்யமுடியுமானால் அதற்கும் நான் தயாராகவே உள்ளேன்.

மாகாண ஆளுநர் வாசஸ்தலமானது அந்த மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாகும். அதனால் மேல் மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் அரசியல் செய்ய இடமளிக்கமாட்டோம்.

இந்த இடத்துக்குவரும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வது எனது கட மையாகும். இதன்போது கட்சி பேதம் பார்க்க முடியாது. அதனை நான் ஒரு போதும் செய்யமாட்டேன் அவ்வாறு நான் செயற்பட்டதும் இல்லையெனத் தெரிவித்துள்ளாா்.