சுதந்திர கட்சிக்கு சந்திரிகா தவறிழைக்க மாட்டாா் - சாந்த பண்டார
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு நெருக் கடியை ஏற்படுத்துவார் என நாம் நம்பவில்லை. அத்தோடு அவருடன் இணை ந்து சுதந்திரகட்சிக்குள் குழுவொன்று கட்சியைவிட்டு வெளியேறப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
முன்னர் இது போன்றதொரு தவறி னைச் செய்து சில காலத்தின் பின்னர் அதனை உணர்ந்து அவர் ஸ்ரீலங்கா சுத ந்திரக் கட்சியுடன் இணைந்து செயற் பட்டுள்ளார். எனவே அவர் மீண்டும் இவ்வாறானதொரு தவறினைச் செய்ய மாட்டார் என சுதந்திர கட்சி யின் இளைஞர் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
சுதந்திரகட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளாா்.
பெரும்பான்மை கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மக்கள் மற்றும் வடக்கு மக்களுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடைவெளியை ஏற்படுத்தவே அவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கு கின்றனர்.
உண்மையில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அரசியலமைப் பொன்றை உருவாக்க அவர்கள் விரும்பினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெய ரையும் குறிப்பிட்டு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அதனை நிறை வேற்றுவோமென தெரிவித்திருக்க வேண்டும்.
இருந்தும் அவர்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை. சுமந்திரன் போன்ற பிரி வினை வாதிகளால் அவ்வாறானதொரு அரசியலமைப்பு நிறைவேறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி என்பன ஒருபோதும் இடமளிக்காது. அத்தோடு அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.