புலமை பரிசில் பரீட்சை விடயத்தில் தீர்மானம் வேண்டும் -அகிலவிராஜ்
சிறுவர்களின் உளவியல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந் துள்ள கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக் குழுச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசிய மாகும்.
இருந்த போதிலும் குறைந்த வருமான பெறும் சிறார்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விட யங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வு குழுக்கூட்டத்துக்கு கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய சிறு வர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், சிறுவர்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், தேசியக் கல்வி நிறு வன அதிகாரிகள், பரீட்சை ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரி கள் பலரும் கலந்துள்ளனா்.