Breaking News

இரணைமடு விசாரணைக்காக ஆளுநரால் புதிய குழு நியமனம்.!

இரணைமடு குளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் முகாமைத் துவம் தொடர்பான விசாரணைக்காக புதிய விசாரணைக் குழுவை  வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட் டச் செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையா டுகையில் இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செய லாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணி யாற்றி இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபார்சுக்கு அமைய மொறட்டுவ பல் கலை கழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப் பட்டுள்ளது.

இக் குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  ஏற்கனவே நியமிக்கப் பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊட கங்கள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதனால் அக் குழு நிறுத் தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.