Breaking News

அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில நாட்களில் காணலாம் - நளின் பண்டார

அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில நாட்களில் காணலாம் அதன் பிறகு பொதுத்தேர்தல் தொடர்பாக யாரும் பேசமாட்டார்கள் என்பதுடன் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பத்தில் நடைபெறுமென இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளாா்.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக் கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக் கையிலேயே இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

அரசாங்கம் முன்வைத்த இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102 பேரே வாக்களித்துள்ளனர். அரசாங் கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

அதனால் பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டுமென எதிர்க்கட்சியினர் தெரி வித்து வருகின்றனர். பொதுத்தேர்தலுக்கு செல்வது தொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சி எந்த தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றது. என்றா லும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்ற நிலையில் அர சாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற காரணத் தினாலே பொதுத் தேர்தல் தொடர்பில் கூச்சலிடுகின்றனா்.