ஹக்கீமின் கருத்தை வரவேற்கின்றேன் என்கிறாா் - மனோ
சிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற் பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரி வித்துள்ளார்.
தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கட்டம் கட்டமாக ஒன் றாக அமரும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தேன். அதனை இந் நாட்டு தமிழ் பேசும் மக்கள் அறிவார்கள்.
அது அப்போது பல காரணங்களால் நிறைவேற வில்லை. இப்போது ஜனாதிபதி மைத்திரி பாலாவின் குளறுபடிகள் காரணமாக அந்த யோசனை கூடிவரும் காலம் கனிந் துள்ளது. இன்றைய தேசிய நெருக்கடியில் சிறுபான்மை கட்சிகள் காத்திரமாக பணியாற்றியதை தமிழ், முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.
சிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்ப தையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நியாயமான அரசியல் மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தர சிங்கள கட்சி தலைவர்கள் தவறி விட் டார்கள் என்பதை சிங்கள மக்கள் இன்று அறியாமல் இல்லை.
எனவே எமது முயற்சியை சிங்கள மக்களும் புரிந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன். சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தேர்தல் கூட்டாக செயற்பட வேண் டும் என்ற நிலைப்பாடுகள் கட்சிகளைப் பொறுத்தவை ஆகும். நான் இங்கே குறிப்பிடுவது கூட்டு செயற்பாடுகளே எனத் தெரிவித்துள்ளாா்.