Breaking News

அமைச்சரவையில் சரத்பொன்சேகாவிற்கு இடமில்லையென்பது - ஏன்?

முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழ ங்குவதற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை யில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமை ச்சரவையில் சரத்பொன்சேகா இடம் பெறாத நிலையிலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.  ஐக்கியதேசிய கட்சி யினர் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் சிறிசேன சரத்பொன் சேகாவை நியமிக்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நட வடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுப்பதாகத் தகவல் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள் பட் டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் உள்ளதாகத்  தகவல்கள் வெளியாகி யுள்ள இந்நிலையிலேயே சிறிசேன அதனை நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.