Breaking News

தோல்வியைக் கண்டு துவண்டுபோவதில்லை - தமிழிசை.!

சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்த லில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து மாநிலங்களிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் பாஜக ஆட் சியிலிருந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்க ளில் காங்கிரஸ் முன்னிலை வகித் துக் கொண்டுள்ள சூழலில் பிற இர ண்டு மாநிலங்களிலும் கூட பாஜக பின்னடைவையே சந்தித்துள்ளது.

இதன் காரணமாக நடுமுழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந் தித்துள்ளது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தோல்வியால் நாங்கள் துவண்டுபோவதில்லை.

வெற்றி வந்தால் துள்ளி குதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றியே ஆக வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் மதச்சார்பற்ற சக்தி களுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.