Breaking News

மஹிந்த வகுத்துள்ள வியூகம்! அமர்க்களமாகப்போகும் ஆடுகளம்!!

மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை சிறிலாங்காவில் இயங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்‌ஷ வும் அவரது அமைச்சரவையும் சட்ட விரோதமானவை என சுடிக்காட்டிய மேற்படி நீதிமன்றம் தற்காலிகமான இடைக்காலத் தடை உத்தரவை நேற் றைய தினம் விதித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த உத்தர வினை தாம் ஏற்கப்போவதில்லை என்றும் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுட னான சந்திப்பும் இன்று காலை இடம்பெற்றிருந்த நிலையில் இந்த மனுத் தாக்கல் செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.