போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச தலையீடு தேவை - விக்கி
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு தேவையென வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கை யிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்க னவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறி விட்டார்கள். ‘எமது படையினர் தவறேதும் செய்யவில்லை. அவர்கள் எந்தவித நீதி முறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என ஜனா திபதியே தெரிவித்துள்ளார்.
அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்வதறியாமலே அவர்கள் தவறேதும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட் டார்கள் என்பதே.
‘எமது படையினர்’ இவ்வாறான மனோநிலை கொண்ட அரசாங்கத்தினர் இருக் கும் போது அவ்வாறான அரசாங்கத்தினரைத் தமது தொழில் புரியும் காலத் தில் காப்பாற்றி வந்த நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமோ வேறேதே னும் சிறப்பு நீதிமன்றங்களோ நீதியை நிலைநாட்டுமென எதிர்பாா்க்க முடி யாது.
ஆகவே சிங்கள அரசியல்வாதிகளிடையே ஜனநாயகம் பற்றிய பிணக்கு, அர சியல் யாப்பு பற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்து கொள்ளும் நீதி யரசர்கள் அல்லது நீதிபதிகள் இனரீதியான அல்லது தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் எழும்போது அல்லது ‘எமது படையினர்’ பற்றி எழும் போது நீதியை நிலை நாட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அவர்களின் பின்னணி அதற்கு இடங்கொடுக்காது. ஆகவே யுத்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை எதிர்பார்த்தால் வெளிநாட்டு சட்டத்துறை அல்லது நீதித்துறை உள்நுழைவுகள் அவசியமே” எனத் தெரிவித்துள்ளாா்.