Breaking News

இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படுமென அகிலவிராஜ் தெரிவிப்பு.!

எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்ப தற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார நிலைமை மற் றும் தற்பொழுது இலங்கையி லுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொது மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன் வந்துள்ளாா்.

பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக் கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங் கிக்கு அறிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.

அதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஜன வரி மாதத்தின் முதல்வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள் ளது. இது பெப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்படுமென்று எரான் விக்ரமரத்ன தெரி வித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளைய தினம் (21-12-2018) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.