Breaking News

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை- ஜேவிபி.!

அரசமைப்பை திட்டமிட்டு மீறியதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர சமைப்பிற்கு முரணான விதத்தில் செயற்பட்டார் என நீதிமன்றம் வழங் கியுள்ள தீர்ப்பை அடிப்படையாக வைத்தே அரசியல் குற்றவியல் பிரே ரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் அரசமைப்பை மீறினால் அவரிற்கு எதிராக நம்பிக் கையில்லா பிரேரணையை கொண்டு வருவோமென தெரிவித்துள்ள விஜித ஹேரத் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டு வரமுடியுமெனத் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை அரசமைப்பு சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக விசேட விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இதற்கான நடவடிக் கைகளை தனது கட்சி முன்னெடுக்குமெனத் தெரிவித்துள்ளார்.