ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தது என்ன ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்றபோது பொதுத் தேர் தல் குறித்தும் ஏனைய விடயங்கள் தொடா்பாக கலந்துரையாடப்பெற்றுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக ஐக் கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள துடன் தற் போதைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடியும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடாதென கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், அடுத்த வருடம் ஜூலை மாதம் பாராளுமன்ற த்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி யுடன் பேச்சு நடத்தியதாகவும் சட்டரீதியான அரசு அமைந்த பின்னர், அந்த அர சின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள், சுதந்திரக் கட் சிக்கு எடுத்துரைத்துள்ளோம்.
பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணங்கி னால் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த நாங்கள் தயார் என் பதையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு, காணி விவகாரம், ஐக்கய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விட யங்களை செய்து முடிப்பதற்கு தற்போதைய பாராளுமன்றம் அதன் ஆயுள் காலம் முடியும் வரையில் கலைக்கப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் த.தே. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளாா்.