முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்; ஜ.நா-விடம் முறைப்பாடு! (காணொளி)
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சிங்கள குடி யேற்றங்கள், தொல்பொருள் திணைக்களம் உட்பட மத்திய அரசின் கீழ் இயங் கும் அரச திணைக்களகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் தமிழர் மரபு ரிமை பேரவை முறையிட்டுள்ளது.
சிறிலங்காவிற்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் முல்லைத்தீவிற்கு சென்று, தமிழர் மரபுரிமை பேரவை யினருடன் சந்திப்பொன்றை நடத்தி யுள்ளனர்.
இச் சந்திப்பிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் அச் செயற்திட்டங்கள் தொடர்பில் முறையிட்டதுடன்,
விரிவான அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளதாக தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வ.நவநீதன் தெரிவித்தார். இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஸ்ரீலங்கா விற்கு விஜயம் செய்து நாட்டின் நிலமைகளை ஆராய்ந்து வருகின்றது.
இந்த குழுவினர் நேற்றைய தினம் போரினால் முழுமையாக அழிக்கப்பட்ட வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவி னர்கள், மற்றும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் தமிழர் மரபுரிமைப் பேரவை ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கமைய முல்லைத்தீவு கோவில்குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர்களான வ.நவநீதன், அருட் தந்தை லூயி ஆம்ஸ்டோங், ஆகியோருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந் துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதன்போது தற்போதைய அரசியல் குழப்ப நிமைகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலமை திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஊடான இனவழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வ.நவநீதன் தெரிவித்துள்ளாா்.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -