Breaking News

ரணில், மைத்திரி, கரு!! ஓரங்கட்டப்பட்டாரா மஹிந்த!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு, ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகி யோருடன், தனியான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

நேற்றிரவு நடந்த இச் சந்திப்பு மூடிய அறைக்குள் நடைபெற்றதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டுள்ளன. தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பது குறித்து இச் சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 10 நிமிடங்களே இச் சந்திப்பு நீடித்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமர் பதவியை ஏற்குமாறும் கோரியதாகவும், அதனை தான் ஏற்க மறுத் ததாகவும் சபாநாயகர் ரணிலிடம் தெரிவித்துள்ளனா்.