ஜனாதிபதிக்கு எதிராக பிரேரணை சமர்ப்பித்தால் த.தே.கூ இன் நிலைப்பாடு இதுவே!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஆதரவு வழங் குகின்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஏதாவது பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஆதர வளிக்கப்போவது இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிக் கும் இடையில் நடைபெற்ற சந்திப் பின்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைப்பதற்கே, கூட்டமைப்பு ஆதரவு வழங்குமெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போதான செயற்பாடுகள் காரணமாக, மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதையும், தமிழக் கூட் டமைப்பின் தலைவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்தும் பிரதமர் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருந்த சிறிலங்கா ஜனா திபதி மைத்ரிபால சிறிசேன அவரை நீக்க வேண்டுமானால் அவருக்கு எதிராக நாடாளுமன்றில் மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப் பித்து அதற்கு முறையான வாக்கெடுப்பொன்றையும் நடத்துமாறும் வலியுறுத் தியுள்ளாா்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலா மற்றுமொரு சந்திப்பு, இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா சிறைச்சாலைகளில், விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய சந்திப்பில் ஆராயப்பட வுள்ளதாக கூட்டமைப்பின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விற்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில், சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இதில் பங்கேற்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளனா்.