"எனது தந்தை தமிழர் என்பதில் நான் பெருமையடைகிறேன்"
எனது தந்தை தமிழர் என்பது குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவரது பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிரசன்ன கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நிஷாந்த டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
“எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்பரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டிற்காக சேவை செய்தவர்களாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.
அத்துடன் நான் மனிதத் தன்மையை மதிக்கிறேனே தவிர நபர் ஒருவரின் இனத்துக்கு அல்ல. எனது கடமையின் போது கட்சி, நிற, இன, மத பேதங்கள் இல்லை. அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலேயே நான் சேவை செய்கின்றேன்.
எனது பிறப்பு சான்றிதழில் எனக்கு சிங்களவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நான் மனித இனத்திற்கே உரிமையாகின்றேன். சிங்களம், தமிழ், முஸ்லிமாக இருப்பதற்கு முன்னர் அனைவரும் மனிதனாக இருப்போம். அத்துடன் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனச்சாட்சிக்கு உண்மையாகவும், நாட்டின் சட்டத்திற்கமையவும் செயற்படுகிறேன்.
இனிமேலும் அப்படித் தான் செயற்படுவேன். எனது கடமை தொடர்பில் பலர் கோபமடைகின்றார்கள். அது குறித்து நான் அதிர்ச்சியடைவதில்லை” எனவும் நிஷாந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.