இலங்கையில் சமஷ்டியை உருவாக்க இடமளிக்க மாட்டோம் - ரணில் தரப்பு! (காணொளி)
இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்க இட மளிக்கப்போவதில்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
எனினும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி புதிய அர சியல் யாப்பின் ஊடாக சமஷ்டி ஆட் சிக் கட்டமைப்பை உருவாக்க முற் பட்டதாலேயே தாங்கள் ஜனாதிபதி யுடன் இணைந்து ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆட்சிக்கு வீழ்ப்பை மேற் கொண்டதாக மஹிந்த ராஜபக்சவும், அவரது விசுவாசிகளும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டு மக் களை பிழையாக வழிநடத்த முற்பட்டுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளாா்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பில் நாட்டு மக் களை தெளிவுபடுத்தும் நோக்கில் ஐக்கிய தேசிய முன்னணி நேற்றைய தினம் ஹோமாகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் நடத்திய பொதுக் கூட் டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய முன்னணி யின் முக்கியஸ்தரும், பங்காளிக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இத் தகவல்களைத் தெரிவித்துள்ளாா்.
ரணில் தலைமையிலான ஆட்சியால் நாடு பேராபத்தை எதிர்நோக்கியிருந்த தாகவும், அதனாலேயே அந்த ஆட்சியை கவிழ்த்ததாகவும் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களது விசுவாசிகள் கூறி வருகின்றனர்.
எனினும் மஹிந்த தரப்பினர் கூறிவரும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும்இல்லை என்று கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின் றார்.
சம்பிக்க –“நாட்டை சமஸ்டிக் கட்டமைப்பாக மாற்ற முயற்சிப்பதாகத் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பாண் மையும், மக்களின் ஆணையும் இன்றி அரசியல் சாசனத்தில் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறானதொரு பிரேரணையை சந்திரிக்கா கொண்டு வந்தார்.
அது நாடாளுமன்றினுள் வைத்தே தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் நாட்டு மக்களை அச்சத்திற்குள் தள்ளுவதற்காகவே மஹிந்தவும் அவரது கும் பலும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
நாம் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முயற்சித்தோம். அதற்கு மஹிந்த வும் அவரது விசுவாசிகளும் முழுமையான இணக்கப்பாட்டினைத் தெரி வித்துள்ளனா்.
அதில் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரனதுங்க, டிலான் பெரேரா, நிமல் சிரிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அதில் நானும் உள்ளடங்கலாக 21 பேர் உள்ளோம். எம்மிடையே 9 யோசனை கள் உள்ளன. அந்த 9 யோசனைகளையும் நாம் நாடாளுமன்றுக்கு கொண்டு வந்துள்ளோம்.
எனினும் இந்த நாட்டை சமஸ்டியினை உருவாக்க வேண்டுமெனின் 150 நாடா ளுமன்ற உறுப்பினர்களின் வாக்குள் அவசியமாகும். அதேபோல அது மக்க ளிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கும் அனுமதி பெற வேண்டும். இந்த நாட்டு மக் கள் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். நாம் அதற்கு இடமளிக் கவும் போவதில்லை.
இந்த நாட்டில் சமஸ்டியினை உருவாக்க முயற்சித்த போது அவற்றை நிறுத்தியதும் நாம். எதிர்காலத்தில் நிறுத்தப் போவதும் நாமே”. தேசப்பற்றா ளர்களாக ஏனையவர்களை விட நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுடைய காவல்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுவரும் மஹிந்த வும், அவரது விசுவாசிகளும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவர்கள் பக்கம் கட்சித் தாவிய மட் டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனை திருப்திப் படுத்துவதற்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், படையினர் வசம் இருக்கும் காணிகளை முழுமையாக விடுவிப்பதாகவும் உத் தரவாதம் அளித்துள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒருவர் கட்சித் தாவியதற்காகவே தமது கொள்கைகள் என கூறிக்கொண்டிருந்த அனைத்தையும் காட்டிக் கொடுத் துள்ள மஹிந்தவினதும், அவரது விசுவாசிகளினதும் உண்மையான நாட்டுப் பற்று இதுதான் என்பதை நாட்டு மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சம்பிக்க வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாட்டளி சம்பிக்க ரணவக்க – “ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்சவும் அவரது கும்பலும், நாட்டில் பாரிய சூழ்ச்சியொன்று நிலவிய தாகவும், விடுதலைப் புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும், சமஸ்டி ஆட்சியொன்றை உருவாக்க முயற்சித் ததாகவும், நாட்டின் தேசிய சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்து ஆட்சிக் கவிழ்ப்பை நியா யப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவரை தமது பக்கம் கவர்ந்துகொண்ட மஹிந்த தரப்பு தற் போது மக்கள் மத்தியில் கூறிவந்த இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறந்து செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யவும், படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாகவும் வாக்குறுதியளித்து வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 பேரில் ஒருவர் மாத்திரமே வந்தார்.
ஒருவர் கட்சித்தாவியதும் ஒட்டுமொத்த கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் மஹிதவும் அவரது கும்பலினதும் பொய்யான நாட்டுப்பற்று எங்கு உள்ளதென்று எம்மால் உணர முடிகிறது”.
இதேவேளைதமிழ் தேசியக் கூட்டமைப்பு இனியும் ஆட்சியில் பங்கு வகிக் காது ஒதுங்கியிருக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் சம்பிக்க ரணவக்க, தமது கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க முன்வந்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பு அர சாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு, வடக்கு கிழக்கு மக்க ளுக்குத் தேவையான அபிவிருத்தியை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பிக்க – “எனினும் இந்த நாட்டின் அரசியலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல் பிரதிநிகளுக்கு உள்நுழைவதற்கான காலம் சரியாக உள்ளது. வடக் கின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருக்காது அரசாங்கமொன் றுடன் இணைந்து அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகித்துக் கொண்டு தமது மக்களுக்கு சேவைகளை ஆற்றுவதற்கான காலம் எழுந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறல்லாது நாம் பிரிந்து வேறாகி வெவ்வேறு நாடுகளை உருவாக்க கனவு கண்டு எந்தவொரு பயனும் கிட்டப்போதில்லை. நாம் அனைவரும் ஒன் றாக இணையக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என அனை த்து இடங்களிலும் பொது அபிவிருத்தியினை மேற்கொள்ள நாம் செயற்பட வேண்டும்.
இதேவேளை நேற்றையதினம் இரவு கொழும்பை அண்மித்த புகுறநகர் பகு தியான அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி யின் கட்சி அமைப்பாளரக்ளின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சம்பிக்க ரணவக்க, நாட்டில் ஒருபோதும் இல்லாதாவாறு அரசாங்கமொன்று இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளாா்.
“எமது நாட்டில் நாம் தற்போது ஜனநாயக சுதந்திரத்தின் மோசமான நிலை யினையே அனுபவித்து வருகின்றோம். இந்த நாட்டில் பிரிவினை தீவிரவாதம் காணப்பட்டது, ஜே.வி.பியின் குழப்பம் காணப்பட்டது, கொழும் பில் வெடி குண்டுகள் வெடித்தன, இராணுவ முகாம்கள் வீழ்த்தப்பட்டன, நாடாளுமன் றில் குண்டு வெடித்தது. எனினும் அவ்வாறான எந்த சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டில் அமைச்சரவையும் பிரதமரும் இல்லாத நிலை ஏற்படவில்லை.
எனினும் இன்று கடந்த 3 ஆம் திகதி மஹிந்த மற்றும் புதிய அமைச்சரவைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்ததைத் தொடர்ந்து இன்று நாட்டில் அரசாங்கமொன்று இல்லாத நிலை காணப்படுகிறது.
சிறிலங்காவின் ஜனநாயக வரலாற்றில் இவ்வாறு அராஜகமான நிலை யொன்று ஏற்படவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். கடந்த ஒக்டோம்பர் 26ஆம் திகதி இந்த அரசாங்கத்தை அமைக்கும் போது மஹிந்த ராஜபக்ச தரப் பினர் எமக்கென்ன தெரிவித்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்த நாட்டை விடுதலைப் புலிகளுக்கு காட்டிக் கொடுக்கப் போகிறார்கள். விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய வீரர் மஹிந்த ராஜபக்ச, புதிய அரசமைப்பினை உருவாக்கி நாட்டை பெடரல்வாதத்திற்குள் தள்ள முயற்சிக்கின்றனர்.
அதன் காரணத்தால் ஏதேனும் சூழ்ச்சி முறையினைப் பின்பற்றியேனும் அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்றே தெரிவித்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.