Breaking News

மைத்திரியின் வர்த்தமானிக்கு தீ வைத்து கொழுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்.!

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரிவினர்கள் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள் ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவை பிரதமராக நியமிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறி வித்தலுக்கு தீயிட்டு கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதியின் தீர்மானங்களை மாற்றாவிட்டால் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத் துள்ளனா்.

மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையைச் சேர்ந்த சினிமா நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வினர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவை ஸ்ரீலங்காவின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிய மித்தமை அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என பலரும் சுட்டிக் காட்டியுள்ளனா்.

அந்த வகையில் ரணில், மைத்திரி, மஹிந்த என எவருக்கும் தாங்கள் ஆதர வளிப்பதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ள தோடு, அரசியலமைப்பை எவர் மீறினாலும் அதற்கெதிராக அறவழிப் போராட் டம் நடாத்துவதாகத் தெரிவித்துள்ளனா்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த அரசியல் முடிவுகள் எவ்வகையி லும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்றும், அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் வாக்காளர்களும் வெட்கித் தலைகுனிவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இது தொடர்பில் நடிகை தீபானி சில்வரு தெரிவிக்கையில், “2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி கதிரையில் அமர்வதற்கு வாய்ப்பளித்த 62 இலட்ச வாக்காளர், தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதனை மைத்திரி பாலவுக்கு வழங்கவில்லை.

சமூக தேவைக்காகவும், பொருளாதாரம், சர்வாதிகார ஆட்சிமுறையை மாற் றவுமே வாக்களித்தார்கள். 62 இலட்சம் மக்கள் வேண்டாம் என்று கூறிய ஒரு வரை இன்று பிரதமராக மைத்திரி நியமித்தார். ஒழுக்க விழுமியங்களுக்கும் சமூக விரோதியாகவும் மாறியுள்ளாா்.

உங்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதி பதிக்கு உரிமையே கிடையாது. 62 இலட்ச மக்களுக்கு எதிராக எடுக்கின்ற தீர் மானங்கள் பிழையாகும். 19ஆவது திருத்தம் அமுலில் இருப்பதனாலேயே எங்களால் இதனை கூறமுடிகிறது.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த வர், இன்று மாற்றுவழியில் செயற்படுகின்றார். 18ஆவது திருத்தத்தில் பல அதிகாரங்களை குறைத்தும், அவர் இப்படி செயற்படுவதாயின் அனைத்து அதிகாரங்களையும் இல்லாதொழிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தென்னிலங்கையில் ஸ்ரீல ங்கா அரச படையினரால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக் கப்பட்ட உறவினர்களின் பெற்றோர், நீதியை வழங்கும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதோடு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்திடமிருந்து ஓரளவேனும் நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்ததாகவும்,

ஆனால் மைத்திரி – மஹிந்த அரசாங்கத்திடமிருந்து கடுகளவேனும் நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்கள். இந்நிலையில் கடத்தி படு கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில், ’1989 ஆம் ஆண்டு நான் வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது எனது மகனை முகத்தை மூடி அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளாா்கள்.

எல்லா இடங்களிலும் அவரை நாம் தேடினோம். இன்று அவர் எம்மோடு இருந் திருந்தால் நாங்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டிருக்காது. இன்று மிகுந்த துக்கத்தோடு இருக்கின்றோம். மகனது கை கால்களை உடைத்துள்ளார்கள்.

குறைந்த பட்சம் எமக்கு நட்டஈட்டையாவது அரசாங்கம் வழங்க வேண்டும் என தனது மனவருத்தத்தைத் தெரிவித்திருந்தார். மற்றுமொரு தாயர் கூறு கையில், எனது மகனை பொலிஸார் கைது செய்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தார்கள். அதன் பிறகு பொலிஸ் நிலையத்திற்கு சென்று நீதி கோரினேன். என்னை கடிந்துகொண்டு துரத்திவிட்டார்கள்.

சிகேரா, உபாலி, ருக்மன் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளே வந்து எனது மகனை என் கண்முன்னே இழுத்துச் சென்றார்கள். பிறகு பாரிய துப்பாக்கி சத்தம் கேட்டது. மகனை சுட்டுவிட்டார்கள் என்றார்கள். எனினும் நாங்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடித்திருந்தோம்.

அதன் பின்னர் எனது இரண்டாவது மகனையும் கடத்திச் செல்ல முயற்சித்து பின்னர் கைவிட்டுச் சென்றிருந்தார்கள். எனது கணவரும் இறந்துவிட்டார். இன்று நான் மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறேன் எனக் கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளாா்.

காணாமல் போனோரது பெற்றோர் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கையில், “நாட்டின் சாதாரண சட்டங்களை வலு விழக்கச் செய்யும்போது அரசியல்வாதிகள் நாட்டின் செயற்பாடுகளை தங்க ளுக்கேற்ற வகையில் திருப்பிக் கொள்ளப்பார்த்ததை 1971, 89 மற்றும் போர் காலங்களில் நாம் பார்த்தோம்.

கொலை, களவு, கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் என்பவற்றை அவர்கள் நாட்டுச் சட்டங்கள் செயலிழந்து போகையில் செய்வார்கள். அதனால் 89களில் இந்தப் பெற்றோரது பிள்ளைகள் ஊடாக அதற்கு ஈடு செலுத்த வேண்டியிருந் தது.

இன்று நாட்டின் உயர்ந்த சட்டமாக அரசியலமைப்பை வலுவிழக்கச் செய்கி றார்கள். சாதாரண சட்டங்கள் வலுவிழக்கச் செய்யும் போது கொலைகள் என்பன அரங்கேறுவதாயின் அரசியலமைப்பை வலுவிழக்கச் செய்தால் என்ன நடக்கும்? அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்.

எங்களுடன் எந்தவொரு போராட்டத்திற்கோ அல்லது துண்டுப்பிரசுர விநி யோகத்திற்கோ பங்குகொள்ளாத நீங்கள், மஹிந்தவுக்கு எதிராக எழுந்து நிற் பதாலேயே ஆதரவளிக்கின்றோம் என்று 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி யன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக இருந்து நாங்கள் தெரிவித் திருந்தோம்.

அதனால் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிடாதீர்கள் எனவும் வலியுறுத் தினோம். எனினும் அவர் துரோகம் செய்துவிட்டார். சட்டத்தில் இல்லாத விட யங்களை வைத்து செயற்படுகிற மைத்திரிபாலவின் மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

89களில் சிவில் அமைப்புக்கள் காணாமலாக்கப்படுதல் தொடர்பாக ஜெனீவா வுக்கு செல்வதற்கு உதவியதை மறந்துவிட்டு இன்று சிங்கள பேரினவாதத்தை கையிலெடுத்து செயற்படுகிற மஹிந்தவுக்கும் இறந்தகாலத்தை ஞாபகப் படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கின்றோம்.

உங்களைப் போல காட்டிக் கொடுப்பவர் இங்கு எவரும் இல்லை என்பதை மஹிந்தவுக்கு கூறுகின்றோம்” எனத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தி னிடையே ஜனநாயகத்தையும், உண்மைகளையும் மறைப்பதற்கு அரச ஊட கங்கள் எடுக்கின்ற முயற்சிகளை வீதி நாடகமாக நடாத்தியுள்ளாா்கள்.