Breaking News

சஜித் பிரேமதாசவின் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா கூட்டமைப்பு.!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளு மன்றத்தில் பெரும்பான்மையை நிரூ பிக்க கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம் பிக்கை பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என தமிழ் தேசியக் கூட் டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக் காத நிலையில் நாளை காலை கூட்டமைப்பினர் ஏகமனதான தீர்மானத்தினை தீர்மானிக்கவுள்ளதாகத்  தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு பெரும்பான்மையை நிருபிக்கும் பிரேரணையை அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை கொண்டு வருகின்றார்.

அப் பிரேரணையை ஜே.வி.பி ஆதரிக்கப்போவதில்லை என ஏற்கனவே தெரி வித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை எந்த தீர் மானமும் எடுக்கவில்லையென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளு மன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.