Breaking News

மஹிந்தவின் இயலாமையை வெளிப்படுத்திய மைத்திரி.!

நாட்டில் தற்போது கடந்த ஒக்டோபர் நிகழ்ந்த திடீர் ஆட்சிமாற்றத்தால் பாரிய குழப்பம் ஏற்பட்டதோடு நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய தேவை மஹிந்த தரப்பினருக்கு ஏற்பட் டதன் விளைவாக எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேரம் பேசப் பட்டுள்ளது.

இந்த பேரம் பேசல் தொடர்பான விடயத்தை மைத்திரி அண்மையில் அம்பலத்தில் விடுத் துள்ளாா். பணம் இல்லாததாலேயே மஹிந்த ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூ பிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்த கருத்தின் ஊடாக, மஹிந்த ராஜபக்சவை அவர் காட்டிக் கொடுத் துள்ளதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி நாடாளு மன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மைத்திரி - மஹிந்த சூழ்ச்சி தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறும், மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை ஏற்றுக்கொண்டு, நாட்டின் எதிர்கால நலன் கருதி சரியான தீர்மானங்களை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமெ னத் தெரிவித்துள்ளாா்.

ஜே.வி.பி தலைமைகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இவ் விடயத்தை தெரிவித்துள்ளார். கருத்துத் தெரி விக்கையில், தனக்குப் பிடித்த ஒருவரையே பிரதமராக நியமிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா்.

அவருக்கு பிடித்த ஒருவரை பிரதமராக நியமிக்க முடியுமென யாப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யைப் பெற்ற ஒருவரை, ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர், பிரதமராக நியமிக்க வேண்டும்.

அதுவே சட்டம். சட்டவிரோத செயற்பாடுகளால் இன்று நாடு பல்வேறு சிக் கல்களை எதிர்நோக்கியுள்ளது. அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் நோக் கில் செயற்படுவதால் இந்த குழப்பங்கள் எழுந்துள்ளன. இப் பிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே என ஜனாதிபதி சிறிசேனவும், மஹிந்தவும் கூறு கிறார்கள்.

 அவ்வாறெனின், கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியே அந்த தீர்மானத்தை எடுத்திருக்க முடியும். எனினும் ஒன்றரை மாதங்களின் பின்னர் அந்த கருத்தை அவர்கள் ஏன் வெளியிடுகின்றார்கள்?

அவர்கள் பணத்தைக் கொடுத்து உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைக்க முயற்சித்தார்கள் எனினும் அவர்களால் அது முடியாமற்போனது. ஆகவே பொது மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான ஒரு கதையை கூறுகின் றார்கள்.

ஆகவே இச் சந்தர்ப்பத்திலாவது தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு, சூழ்ச்சி வெளிப்பட்டுவிட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டு, உண்மையை புரிந்து கொண்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி முன்வர வேண்டும். தம்மால் இழைக்கப்பட்ட தவறினை உணர்ந்துகொண்டு நாட்டு மக்களுக்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.