Breaking News

நிபந்தனையின்றியே த.தே.கூட்டமைப்பினர் ஆதரவு என்கிறார் - ராஜகருணா

எந்தவித நிபந்தனைகளுமின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதர வளித்தாக தெரிவித்த பாராளுமன்ற‍ உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஒரு மித்த நாடு என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் ஒன் றிணைந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

அலரிமாளிகையில் இன்று நடை பெற்ற ஊடகச் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.  ரணில் விக்ரம சிங்க மீதான நம்பிக்கை பிரேரணை 117 பெரும்பான்மை வாக்கு களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிரான நம் பிக்கையில்லா தீர்மானமும் அனை த்து முறைமைகளிலும் நிறைவேற் றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எமக்கே பெரும்பான்மை உள்ளது என்பது நிரூபிப்பதற்கு இதனைவிட வேறு வழிமுறைகள் எவையும் கிடையாது. ஒருபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் மதிப்ப ளித்து நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக்கொண்டு கூடிய விரைவில் இப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவார் என எதிர்பார்க் கின்றோம்.

 மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷவும் இவற்றை ஏற்றுக்கொண்டு மரியாதையுடன் அவராக முன்வந்து பிரதமர் பதவியை துறக்க வேண்டுமெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டு மெனத் தெரிவித்துள்ளாா்.