மஹிந்த தலைமையிலான அரசாங்காம் தொடரும் அச்சமில்லை - ஜனாதிபதி.!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்காம் தொடர்ந்தும் முன் னெடுத்துச் செல்லப்படும்.
எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இவ் விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைக்கும் உத் தேசம் எனக்கில்லை. அது குறித்து நான் சிந்திக்கவில்லை. மஹிந்தவு டன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்பாட்டை மேற்கொள்வோம்.
அரசாங்கத்தை முன்னெடுப்போம். இவ் விடயத்தில் ஏதாவது பிரச்சினை கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் மாற்றுத் திட்டத்தை நான் வைத்துள்ளேன். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படு மெனத் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபேகம கேட்போர் கூடத்தில் நடைபெற் றது. இச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,
அரசியலமைப்புக்கு ஏற்ற வகையிலேயே நான் பிரதமராக மஹிந்த ராஜ பக்ஷவை நியமித்துள்ளேன். அவரது தலைமையிலேயே தொடர்ந்தும் ஆட்சி முன்னெடுக்கப்படும்.
அதற்கான பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. இவ் விடயத்தில் ஏதாவது பிரச் சினை ஏற்படுமானால், அதற்கான மாற்றுத் திட்டம் என்னிடம் உள்ளது. இத னால், எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
எமது ஆட்சிதான் தொடர்ந்தும் நடைபெறும். ஐக்கிய தேசியக் கட்சியின் அர சாங்கம் மீண்டும் உருவாகும் என்று கூறப்படும் கதைகளை எவரும் நம்பத் தேவையில்லை. அவ்வாறான நிலை ஏற்படமாட்டாது.
14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவுள்ளேன். பிரதமராக தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார். அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை. புதிய அரசாங்கத்தின் உருவாக்கும் விடயம் தொடர்பில் நான் நிபுணர்களுடன் ஆராய்ந்தே நடவடிக்கை எடுத்திருந்தேன்.
பல தரப்புடனும் கலந்துரையாடியே இந்த முடிவினை எடுத்துள்ளேன். பாராளு மன்றத்தை நான் கலைக்க போவதாக கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.
மன ரீதியில் கூட நான் அவ்வாறு சிந்திக்கவில்லை. பாராளுமன்றம் கலைக் கப்படப் போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் எம்.பி.க்கள் பலர் என்னுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் கேட்டுள்ளனர்.
தற்போது பாராளுமன்றத்தை கலைத்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக் காமல் போய்விடும் இதனால்தான் அவர்கள் என்னுடன் சந்திப்பு மேற்கொள் வதற்கு முயன்றுள்ளாா்.
அவர்களை சந்தித்து நான் பேசவுள்ளேன். 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரம சிங்க பிரதமராக இருந்தபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க கூட்டங்களின் போது தனது கைப்பையைக்கூட கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.
கைப்பைக்குள் குண்டு கொண்டு வருவதாக அன்று அரசாங்கத் தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறான நிலைமையை மறந்து தற்போது சந்திரிகா குமாரதுங்க செயற்பட்டு வருகின்றார். மஹிந்தவுடன் இணைந்து நாம் எமது பயணத்தை முன்னெடுப்போம்.
எமது ஆட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஜனவரி மாதத்திலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்போம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே முன்னெடுக்கப்படும்.
இவ் விடயத்தில் பிரச்சினை எழுமானால் என்னிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தை நான் முன்னெடுப்பேன். எனவே யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நிம்மதியாக நீங்கள் நித்திரை கொள்ளலாம். நானும் நிம்மதி யாக நித்திரை கொள்வேன் எனத் தெரிவித்துள்ளாா்.
இச் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்தமாற்றங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன் வைத்தார்.இதற்கு எகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவித் துள்ளாா்.