சிறிலங்கா நாடாளுமன்றில் போல் கிளிநொச்சியில் நடந்தது என்ன.?
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று நடைபெற்றது. வரவு செலவுத் திட்டம் தொடர்பாக விவாதத்தின் போது கரைச்சி பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் இ. இளங்கோவன் தவிசா ளரை கைநீட்டி கதைத்துள்ளார்.
இதனையடுத்து நடைபெற்ற வாக்குவாதத்தை அடுத்து சபை அமர்வில் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர் இ. இளங்கோவனை வெளி யேறுமாறு தவிசாளர் பணிப்புரை விடுத்த போதும் அவர் வெளியேறவில்லை.
இதனால் சபை அமர்வுகள் சற்று நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து மீண்டும் கூடியபோது கிளிநொச்சி பொலிஸாரை பாதுகாப்பிற்கு அழைத்த கரைச்சி பிரதேச தவிசாளர் சபை அமர்வுகளை முன்னெடுத்துள்ளாா்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்ட போது சபாநாயகர் தனது பாது காப்பிற்காக பொலிஸாரை அழைத்துள்ளாா்.