தமிழீழம் அமைப்போமென கடல் நீரில் சபதமெடுத்த வைகோ.!
பொது வாக்கெடுப்பின் மூலம் சுதந்திர தமிழீழத்தை அமைத்தே தீருவோமென தஞ்சையில் கடலில் இறங்கி சபதமெடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தமிழீழ தாயகத்திற்கான போராட்ட களத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழர் கள் வாழும் பகுதிகளில் எல்லாம் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஆண்டுதோறும் மதிமுக சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நடத்தப்படும். இதில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொள் வர். அதேபோல் இவ்வாண்டும் மதிமுக தலைமை அலுவலகத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தஞ்சை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வைகோ சென்றிருந்த காரணத்தினால் 1989 ஆம் ஆண்டு புலித் தலைமையை சந்திக்க தான் பயணம் மேற்கொண்ட பிள்ளையார் திடல் கடற் கரையில் கடல்நீரில் இறங்கி, சுதந்திர தமிழீழத்தினை அமைப்பதற்கான தன் னாலான அனைத்து முயற்சி மேற்கொள்வேன் என சபதமெடுத்துள்ளாா்.
முன்னதாக, மதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஈழத்து கவி காசி ஆனந்தன் பங்கேற்றுள்ளாா்.