Breaking News

ரணில் தலைமையில் அவசர சந்திப்பு ஐக்கிய தேசிய முன்னணி.!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை யில் ஐக்கிய தேசிய முன்னணி இன்றைய தினம் மற்றுமொரு கலந்துரை யாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க மற்றும் தற்போதைய பிரத மர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய தரப் பினர் தனித்தனியாக பல்வேறு கலந் துரையாடல்களில் ஈடுபட்டவாறு உள் ளனா்.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றுமொரு கலந்துரை யாடல் இன்று நடைபெறவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று மாலை இக் கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசிய முன்னணியினர் தொடர்ச்சியாக பல் வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினமும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இக் கலந்துரையாடலில் ஆராயப்படும் என்றும், முக்கிய தீர்மானங்கள் சிலவும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட லாமென எதிர்பாா்க்கப்படுகின்றது.