13 வருடங்களின் பின் விடுதலை பெற்ற அரசியல் கைதி.!
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சியினால் நேற்றைய தினம் விடுதலையாகியுள்ளாா்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சோ்ந்த தற்பொழுது மரணமடைந்துள்ளவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான் அல்லது சிவசங்கர் வினோதன் அல்லது சாள்ஸ் மாஸ்டர்,
கோமதி மதிமேகலா ஆகியோருடன் இணைந்து சதி செய்து முன்னாள் வெளிவிவகார அமைச்சா் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்தமைக்கு உடந்தையாக செயற்பட்டதாக பயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் சகாதேவன், இசிதோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவருக்கும் எதிராக பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதனுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச தரப்பில் 15 பேர் சாட்சியமளித்தனர்.
மேலும் அரச தரப்பில் இரண்டாம் எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நீதிமன்றினால் உண்மை விளம்பல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவ் வாக்கு மூலம் சுயமாக வழங்கப்படவில்லை.
எனவே அதனை அரச சான்றாக எடுத்துக் ஏற்றுக்கொள்ள முடியாதென மேல் நீதிமன்றம் 03.10.2018 அன்று நிராகரித்த நிலையில் இவ் வழக்கு நேற்றைய தினம் மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிரியின் தரப்பில் ஆஐரான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி . தவராசா தனது வாதத்தில், இந்த வழக்கில் அரச தரப்பில் காலஞ் சென்ற முன் னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த படையினரும் பொலிஸ் உத்தியோகத்தவர்களும் அரச தரப்பில் சாட்சியமளித்திருத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆனால் அவர்களுடைய சாட்சியங்களில் இரண்டாம் எதிரிக்கெதிராக எந்தவித சான்றுகளும் முன்வைக்கப்படாதது மட்டுமன்றி இந்த சாட்சியங்களில் உள்ள பல முரண்பாடுகளையும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
மேலும் தனது வாதத்தில், இக் கொலை சம்பவம் அதியுட்ச பாதுகாப்பு வலையத்தில் நடந்த போதிலும் நேரடியான கண்கண்ட சாட்சியங்ளோ சூழ்நிலைச்சான்றுகளோ அரச தரப்பினால் இந்த வழக்கில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட ஒரே சான்றான குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இந் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலை யில் இரண்டாம் எதிரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இரு தரப்பினரதும் வாத பிரதி வாதங்களையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராட்சி சிரேஸ்ட சட்டத்தரணி கே. வி. தவராசாவின் சட்ட வாதத்தை ஏற்று இரண்டாம் எதிரியான ஆரோக்கியநாதனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் சிரேஸ்ட அரச சட்டவாதி மொகமட் நவாவி ஆஜரானதுடன் இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி செல்வி தர்மஐா தர்மராஐாவின் அனுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே .வி தவராசா ஆஜராகியுள்ளாா்.