கிளிநொச்சியில் மஹிந்த அணியினா் ஆர்ப்பாட்டம்!
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலை விரைந்து நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.
காக்கா கடை சந்தியிலிருந்து ஆரம்பித்து ஏ-9 வீதி ஊடாக கிளிநாச்சி பேருந்து நிலையம் வரை இந்த பேரணி சென்றது. ‘நாடாளுமன்ற தேர்தலை அவசரமாக நடத்துங்கள், சபாநாயகரை வெளியேற்றுங்கள்’ என்ற வாச கம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கிய வாறு, ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள் ளது.
இதன்போது, நாடாளுமன்ற தேர்தலை விரைந்து நடத்துமாறும், ரணிலை வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷமெழுப்பினர். குறித்த பேரணி யில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்ன உள் ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ளனா்.
நல்லாட்சி பிளவடைந்து நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மை தொடர்பில் தொடர்ச்சியாக சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு,
அரசியல் யாப்பிற்கு முரணான வகையில் பிரதமர் மாற்றம் ஏற்படுத்தப்பட் டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, ரணிலையும் பிரதமராக ஏற் றுக்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் மறுப்புத் தெரி வித்துள்ளன.
இவ்வாறான குழப்பநிலை நாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நோக்கில், தேர்தலை நடத்துவது சிறந்ததென ஒருசாரார் குறிப்பிடுகின்றனர். எனினும், முறையற்ற ரீதியில் தேர்தலுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடி யாதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.