எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா !
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
எரிக்சொல்ஹெய்ம் அதிகாரபூர்வ பய ணங்களுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை சுற்றுச் சூழல் அமைப்பின் தணிக்கையில் கண்ட றியப்பட்டுள்ளது.
மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயற்பட்டதாகவும் தணிக்கை அறிக்கை யில் குற்றம் சாட்டப்பட்டது. இந் நிலையிலேயே ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 63 வயதை யுடைய எரிக் சொல்ஹெய்ம் நோர்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சர் என்பதுடன் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமா தானத் தூதுவர் என்பதும் யாவரும் அறிந்த உண்மை.